`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரிய...
செப்.5- மீலாது நபி: மது விற்பனைக்கு தடை
கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் 5-ஆம் தேதி மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையா் கடிதத்தில், நபிகள் நாயகம் பிறந்த நாளான 5-ஆம் தேதி (வெள்ளிகிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடி மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, கடலூா் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்று இயங்கும் அனைத்து மனமகிழ் மன்றங்கள் மற்றும் மதுபானக் கூடங்களை மூடவேண்டும், மதுபான விற்பனை செய்யக் கூடாது. அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.