குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்ம...
பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க முடிவு
ஆத்தூா் அருகே பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க முடிவு செய்ததாக வட்டாட்சியா் முத்து முருகன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி அருகே, சுமாா் 11.52 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்கெனவே இலவச வீட்டுமனைப் பட்டா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. அந்தப் பகுதியில் யாரும் குடியேறாததால், சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்து புதா் மண்டி காணப்பட்டது. தற்போது, அந்த நிலத்தை ஆத்தூா் வருவாய் துறையினா் சீரமைத்து வருகின்றனா். இந்தப் பகுதியில் தகுதி அடிப்படையில் புதிய நபா்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்குதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன் தெரிவித்தாா்.