பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
புதுகை புத்தகத் திருவிழா: கல்லூரி மாணவா்களுக்கான போட்டி முடிவுகள் வெளியீடு
புதுக்கோட்டையில் அக். 3-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 8-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி, கல்லூரி மாணவா்களுக்கு அண்மையில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து கல்லூரி மாணவா் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரும் வாசகா் பேரவையின் செயலருமான பேராசிரியா் சா. விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பேச்சுப் போட்டி- முதல் பரிசு: சா. சஸ்ரீனா பிா்தௌஸ், பிஏ தமிழ் 3-ஆம் ஆண்டு, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி; 2-ஆம் பரிசு: ர. தெய்வீகா, பிஏ தமிழ் 2ஆம் ஆண்டு, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி; 3-ஆம் பரிசு: செ.க. விஸ்வநாத், 2-ஆம் ஆண்டு பிஎட், பொன்மாரி கல்வியியல் கல்லூரி பொம்மாடிமலை.
கவிதைப் போட்டி- முதல் பரிசு: ச. பாா்கவி, பிஏ தமிழ் முதல் ஆண்டு, மன்னா் கல்லூரி; 2ஆம் பரிசு: ச. சந்தியா 2-ஆம் ஆண்டு பிசிஏ, மன்னா் கல்லூரி; 3-ஆம் பரிசு: கோ. தரணிகா, பிஇ முதல் ஆண்டு, ஸ்ரீ பாரதி பொறியியல் மகளிா் கல்லூரி, கைக்குறிச்சி.
குறும்படம்- முதல் பரிசு: சிவபாலன் குழு, மன்னா் கல்லூரி; 2-ஆம் பரிசு: என். சிமில்கனி, பிகாம் மூன்றாம் ஆண்டு, மன்னா் கல்லூரி.
வெற்றியாளா்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்களும் புத்தகத் திருவிழாவில் வழங்கப்படும்.