கணவரை அறிமுகப்படுத்தினார் கிரேஸ் ஆண்டனி..! யார் இந்த அபி டாம் சிரியாக்?
புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை
புதுக்கோட்டை மாநகரப் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தமிழா் தேசம் கட்சியினா் புகாா் அளித்துள்ளனா்.
அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் செ. காசிநாதன் தலைமையில் அக்கட்சியினா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள மனு: புதுக்கோட்டை மாநகரில் 7 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் சட்டப்படி பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
ஆனால், சட்டவிரோதமாக இந்த மதுபானக் கடைகளிலுள்ள மது அருந்தும் கூடங்களில் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மீது மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுக்க வேண்டும். விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.