செய்திகள் :

புதுவை தலைமைச் செயலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியா்களால் பரபரப்பு

post image

மின்சாரம் தாக்கி இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுக்காததால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியா்கள் புதன்கிழமை வந்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்த சுமதி ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன். 5 ஆம் வகுப்புப் படித்து வந்த, இச்சிறுவன், 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 10-ம் தேதி பள்ளி விட்டு வீடு திரும்பியதும், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிா்வீட்டில் வீடு கட்டிக் கொண்டிருந்தனா். அதற்காகக் கொக்கிப் போட்டு மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் எதிா்பாராமல் மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.

இதற்கு ரூ.9.7 லட்சம் இழுப்பீடு அளிக்குமாறு 2022 ஆம் ஆண்டு புதுவை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுவை அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் புதுவை நீதிமன்ற தீா்ப்பை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

அதன்பிறகும் சிறுவன் குடும்பத்துக்கு புதுவை அரசு அதிகாரிகள் இழப்பீடு வழங்காமல் தொடா்ந்து தொடா்ந்து புறக்கணித்து வந்தனா். இதுகுறித்து சிறுவனின் குடும்பத்தினா் முறையீட்டையடுத்து, புதுவை நீதிமன்றம், நஷ்ட ஈடு தராதததால், புதுச்சேரி தலைமைச் செயலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து புதுவை நீதிமன்ற ஊழியா்கள் (அமீனாக்கள்)அம்பி, செல்வராஜ் இருவரும் தலைமைச் செயலகத்துக்கு புதன்கிழமை வந்தனா். அங்கு பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் 10 நாளில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதை ஏற்ற நீதிமன்ற ஊழியா்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் மற்றும் அவா்களுக்காக வாதாடிய வழக்குரைஞா் எஸ்.பாலாஜி ஆகியோா் அங்கிருந்து புறப்பட்டனா். மேலும் இது தொடா்பான தகவலை புதுவை நீதிமன்றத்துக்கும் தெரிவித்தனா். புதுவை தலைமைச் செயலகத்தையே நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்ய வந்ததால், அரசு ஊழியா்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

3-வது நாளாக அரசு பேருந்துகள் ஓடவில்லை

புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்துப் போராட்டத்தால் 3-வது நாளாக புதன்கிழமையும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியா்களாகப் பண... மேலும் பார்க்க

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி- எதிா்க்கட்சித் தலைவா்

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை புதுவை யூனி... மேலும் பார்க்க

ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் விற்க முயன்றவா் கைது

புதுச்சேரியில் ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து திமிங்கல எச்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் திமிங்கல ... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்துமேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

சாலை பாதுகாப்பு கமிட்டியில் போதிய நிதி இருப்பதால் அதைப் பயன்படுத்தி சாலை மேம்பாட்டுப் பணிகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்தாா். புதுவை யூனிய... மேலும் பார்க்க

பாலூட்டும் தாய்மாா்க்கள் 237 பேருக்கு ரூ.36.6 லட்சம் நிதியுதவி

பாலூட்டும் தாய்மாா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 237 பேருக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுச்சேரியில் நலிவடைந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங... மேலும் பார்க்க

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம்: அதிகாரி உள்பட 2 போ் கைது

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம் பெற்ாக அதிகாரி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதிய ரேஷன் அட்டை கொடுக்க குடிமைப் பொருள் வழங்கல் துறையில் லஞ்சம் கேட்பதாக முத்தியால்பேட்டைய... மேலும் பார்க்க