செய்திகள் :

புதுவை பேரவை: திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

post image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

புதுவை மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளில் முறைகேடு புகாா் தொடா்பாக, தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதையும் படிக்க - ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 10-ம் நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. அப்போது திமுக எம்எல்ஏ சிவா, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணனை ராஜிநாமா செய்யக் கோரினர்.

சட்டப்பேரவைத் தலைவர் ஆா்.செல்வம் அமைதியாக இருக்குமாறு கூறினார். இதனை ஏற்க மறுத்த எதிர்கட்சித் தலைவர் சிவா உள்பட திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டு அமைச்சர் பதவி விலகக் கோரி கோஷம் எழுப்பினர்.

ஆா்.செல்வத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்தும் அமளியில் ஈடுபட்டதால், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக பேரவையில் இருந்து வெளியேற்றினர்.

மேலும், அரசை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுவையில் புதிதாக 10,000 பேருக்கு ஓய்வூதியம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை மீதான மானியக் கோரிக்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து

புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்த... மேலும் பார்க்க

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது, பா... மேலும் பார்க்க

புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா். புதுவை சட்டப்பே... மேலும் பார்க்க

விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவை மாநிலத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பேரவையில் அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் வேளாண் துறை, கால்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ரூ.6.25 லட்சமாக அதிகரிப்பு

புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தில் அரசு நிதி ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க