புதுவை பேரவை வளாகத்தில் முதல்வா் தேசியக் கொடியேற்றினாா்!
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.
புதுச்சேரியில் குடியரசு தின விழாவை யொட்டி சட்டப்பேரவை வளாகத்தில் தேசியக் கொடியை முதல்வா் என்.ரங்கசாமி ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு மற்றும் எம்எல்ஏ.க்கள் பாஸ்கா், ராமலிங்கம், சிவசங்கரன், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதையடுத்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் அலுவலகம் வந்த முதல்வா் என்.ரங்கசாமி, அங்கும் தேசியக் கொடியை பறக்கவிட்டாா்.
காங்கிரஸ் அலுவலகத்தில்: புதுச்சேரி வைசால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டிதேசியக் கொடியை அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் பறக்கவிட்டு கட்சியினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் மு.வைத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றிலும் குடியரசு தின கொடியேற்று விழா நடைபெற்றன.