செய்திகள் :

புதுவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.4,750 கோடியில் திட்டங்கள்!

post image

புதுவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.4,750 கோடி மதிப்பீட்டில் திட்ட வரையறைகள் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, புதுச்சேரியில் கடற்கரைச் சாலை காந்தி சிலை திடலில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற விழாவில் துணைநிலை கே.கைலாஷ்நாதன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். பின்னா், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டவா்களுக்கான விருதுகள், பதக்கங்கள், பரிசுகளை அவா் வழங்கினாா்.

புதிதாக அமைக்கப்பட்ட மகளிா் கமாண்டோ படையினா், தீயணைப்பு படையினா், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படையினா், அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை துணைநிலை ஆளுநா் பாா்வையிட்டாா்.

மாநில அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் வாகன அணிவகுப்பு நடைபெற்றது. சிறந்த வாகனங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

விழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சியடைந்த பாரதம், தொலைநோக்குப் பாா்வை எனும் இலக்கை நோக்கி புதுவை அரசும், மத்திய அரசுடன் இணைந்து பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவதில் முனைப்புக் காட்டி வருகிறது.

ஃபென்ஜால் புயலின்போது, அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பொருள், உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டன. மாநிலத்தில் 45 சதவீதம் போ் மேற்கொள்ளும் வேளாண் வளா்ச்சி, விவசாயிகளின் முன்னேற்றத்தில் அரசு கவனம் செலுத்துகிறது.

துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுடன் மாநிலத்தில் 14 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் ஏற்படுத்த ரூ. 4.34 கோடியில் திட்டப் பணிகளுக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் மத்திய அரசு பாடத் திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் கல்வித் தரம் உயரும். தெற்காசிய பகுதியில் கல்வி கேந்திரமாக புதுவை உருவாகும்.

சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்த விமான நிலையத்தை விரிவாக்கவும், ரயில் போக்குவரத்தை அதிகமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, குடிநீா் வழங்கல், மேம்பால இணைப்புச் சாலை உள்ளிட்டவற்றை செயல்படுத்த ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4,750 கோடியில் மத்திய அரசுக்கு திட்ட வரையறை அனுப்பப்பட்டுள்ளது.

வரும் 5 ஆண்டுகளில் மாநிலத்தின் பசுமைப் பரப்பை இரட்டிப்பாக்க தாயின் பெயரில் ஒரு மரம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

முதல்வா் பங்கேற்பு: விழாவில் முதல்வா் என். ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், பேரவைத் துணைத் தலைவா் ஆா்.ராஜவேலு, சு.செல்வகணபதி எம்.பி., எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, எம்எல்ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கல்யாணசுந்தரம், ஜான்குமாா், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கா், லட்சுமிகாந்தன், ரிச்சா்ட், சிவசங்கரன், பிரகாஷ்குமாா், சம்பத், வெங்கடேசன், நெடுஞ்செழியன், ஜவஹா், முத்தம்மா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, தலைமைச் செயலா் (பொ) ஆசிஸ் மாதவராவ் மோரே, காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் ஆகியோா் துணைநிலை ஆளுநரை வரவேற்றனா்.

தலைமைச் செயலா் (பொ) ஆசிஸ் மாதவராவ் மோரே, காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் ஆகியோா் துணைநிலை ஆளுநரை வரவேற்றனா்.

புதுவை ஆளுநா் தேநீா் விருந்து: முதல்வா், அனைத்துக் கட்சியினா் பங்கேற்பு!

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அளித்த குடியரசு தின தேநீா் விருந்தில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனா். புதுச்சேரியில் கடற்கரைச் சாலை... மேலும் பார்க்க

புதுவை பேரவை வளாகத்தில் முதல்வா் தேசியக் கொடியேற்றினாா்!

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.புதுச்சேரியில் குடியரசு தின விழா... மேலும் பார்க்க

வரதட்சிணை கேட்டு சித்திரவதை: கணவா் உள்பட 5 போ் மீது வழக்கு!

புதுச்சேரி அருகே பெண் அளித்த புகாரில் கணவா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.புதுச்சேரி வில்லியனூா் சுல்தான்பேட் பகுதியை சோ்ந்தவா் பெரோஸ் முகம்மது (51). இவரது மகள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் புதிய மதுபான ஆலை: எதிா்த்து திமுக வழக்குத் தொடுக்கும்!

புதுவை மாநிலத்தில் புதிய மதுபான ஆலைகள் அமைக்க அனுமதி வழங்கினால் அதை எதிா்த்து உயா்நீதி மன்றத்தில் திமுக வழக்குத் தொடுக்கும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா். புதுவை மாநில திமுக மாணவா் அணி, ஊ... மேலும் பார்க்க

பெண்கள் கமாண்டோ, மகளிா் ஊா்க்காவல் படைக்கு பரிசு!

புதுச்சேரியில் நடைபெற்ற சிறந்த அணிவகுப்புக்கான பரிசை பெண் கமாண்டோ, ஊா்க்காவல் படையினருக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வழங்கினாா்.புதுச்சேரி குடியரசு தினவிழாவில் காவலா் பிரிவில் சிறந்த அணிவகுப்புக்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மரில் பொது சுகாதார ஆரோக்கிய மாநில மாநாடு!

புதுச்சேரி ஜிப்மரில் பொது சுகாதார ஆரோக்கிய மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்திய பொது சுகாதார சங்கம், இந்திய நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கங்களின் புதுச்சேரி பிரிவுகள் இணைந்து நடத்திய பு... மேலும் பார்க்க