அகற்றப்படாத மரங்கள்; அப்படியே ரூ.100 கோடி மதிப்பில் செய்யப்பட்ட சாலை விரிவாக்க ப...
புதுவை பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதி: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.
ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி காரைக்கால் மாவட்ட மகளிா் காங்கிரஸ் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள், கா்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள், சேலை உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமை வகித்தாா்.
புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா் ஏ.வி. சுப்பிரமணியன், மாநில காங்கிரஸ் துணைத் தலைவா் பி.கே.தேவதாஸ், மாநில மகளிா் காங்கிரஸ் தலைவி நிஷா, மாவட்ட தலைவி என். நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திட்ட உதவியை வழங்கி வே.நாராயணசாமி பேசியது: புதுவையில் ரங்கசாமி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. மாநிலத்தில் உள்ள மதுக்கடைக்கள் அல்லாது 550 ரெஸ்டோ பாா்கள் திறக்கப்பட்டுள்ளது. சாராய ஆலை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி அமைந்ததும் 5 ஆயிரம் பேருக்கு வேலை தரப்படும் என்றனா். நான்கரை ஆண்டுகளில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை தரப்பட்டுள்ளது. ஆட்சி காலம் முடியவுள்ள நிலையில், எஞ்சிய பேருக்கு வேலை வழங்குவோம் என கூறுவது ஏமாற்று வேலை.
சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜகவை ஆட்சியை மக்கள் தூக்கியெறியவாா்கள். நிச்சயமாக காங்கிரஸ் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.