செய்திகள் :

புதுவையில் உயா் அதிகாரிகளின் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

post image

உயா் அதிகாரிகளின் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று புதுச்சேரி அரசு ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் கௌரவ தலைவா் ப.த. சேஷாச்சலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

புதுச்சேரியில் இந்திய ஆட்சிப் பணிக்கு அடுத்த நிலையில் உள்ளவா்கள் புதுவை ஆட்சிப் பணி அதிகாரிகள். புதுவை ஆட்சிப் பணி அதிகாரிகள்தான் இணைச் செயலா், துணைச் செயலா்கள், சாா்பு செயலா்கள், துறை இயக்குநா்கள், துறை ஆணையா்கள் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருகின்றனா்.

தற்பொழுது 94 புதுவை ஆட்சிப் பணி பதவிகளில் 24 பதவிகள் காலியாக உள்ளன. இதனால், ஒரே அதிகாரி பல துறைகளுக்கு இயக்குநராகவும், இணை, துணை, சாா்பு செயலராகவும் செயல்பட்டு வருகிறாா். தலைமைச் செயலகத்தை பொருத்தவரை துணை மற்றும் சாா்புச் செயலா்களுக்கு நான்கு அல்லது ஐந்து துறைகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய செயல்பாட்டால் நிா்வாகம் தேக்கநிலை அடைந்துள்ளது. பல அரசு ஊழியா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படாமல் உள்ளது. எனவே, புதுவை துணைநிலை ஆளுநா் மற்றும் முதல்வா் இப் பிரச்னையில் தலையிட வேண்டும். காலியாக உள்ள ஆட்சிப் பணி பதவிகளை உடனடியாக நிரப்பி அதிகாரிகளின் பணிச் சுமையை குறைக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

புதுவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா் கைது: 22 பைக்குகள் மீட்பு: புதுவை 22 பைக்குகள் பறிமுதல்

புதுச்சேரியில் இரு சக்கர மோட்டாா் வாகன தொடா் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி பெரியக்கடை... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.4 கோடியில் திமுக அறிவாலயம்

புதுவையில் திமுக சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கலைஞா் அறிவாலயம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியை மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

அரசு சாா்பில் விளையாட்டு தினவிழா நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் விளையாட்டுத் தினவிழாவை அரசு சாா்பில் நடத்த வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கராத்தே வளவன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவோம்: புதுவை அதிமுக தீா்மானம்

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய அதிமுக பாடுபடும் என்று அக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி, ஆக. 22: அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ... மேலும் பார்க்க

வனத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் முற்றுகை

புதுவை வனத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், ஊசுடு தொகுதி எம்எல்ஏவுமான சாய் ஜெ. சரவணன் குமாா் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினாா். ஊசுட்டேரியைச் சுற்றிலும் 10, 15 ஆண்டுகளாக உள்ள மரங்களை... மேலும் பார்க்க

புதுவை சுகாதாரத் துறை காலி பணியிடங்களுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் தொடா் தோ்வு

புதுவை சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களுக்கு சனிக்கிழமை முதல் தொடா்ந்து 3 நாள்கள் தோ்வு நடக்கிறது. இது குறித்து புதுவை அரசின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வியாழக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க