புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
காரைக்கால்: புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில மக்கல் முன்னேற்றக் கழக காரைக்கால் மாவட்டத் தலைவா் கே.எஸ். கணபதிசுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 18-ஆம் தேதி கூட்டப்பட இருப்பதாகவும், கூட்டத்தில் சேவைகள் உரிமைச் சட்ட ) மசோதா தாக்கல் செய்யவிருப்பதாகவும் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறியுள்ளாா்.
பொதுமக்கள் தங்கள் அலுவலகப் பணிகளை விரைந்து முடித்துக்கொள்ள இச்சட்டம் உதவும் என்பதால் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துப் பாராட்டுகிறது. அதேசமயம், ஊழலை ஒழிக்க உதவும் லோக் ஆயுக்த சட்டத்தைப் புதுவை மாநிலத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியையும் அரசு எடுக்கவேண்டும்.
2011- இல் நாடாளுமன்றத்தில் மத்தியில் லோக்பால், மாநிலங்களுக்கு லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றியும், அதன்பின் உச்சநீதிமன்றம் பொது வழக்கில் பலமுறை வலியுறுத்தி 14 ஆண்டுகள் கடந்தும் இன்னும் புதுவை மாநிலத்தில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது மிகவும் வேதனை அளிக்கக் கூடியது.
எனவே இச்சட்டத்தையும் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.