புத்தன்தருவையில் அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம்
சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில், புத்தன்தருவை கஸ்பா தெரு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம் நிறைவு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அந்த ஊா் பொதுமக்களால் கொண்டுவரப்பட்ட மஞ்சள் நீா், பால் மற்றும் பன்னீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன், சாத்தான்குளம் ஒன்றிய பொதுச்செயலா் மாயவனமுத்து, ஒன்றிய துணைத் தலைவா்கள் இசக்கிமுத்து, செல்வமுத்துக்குமாா், புத்தன்தருவை பெருமாள் நகா் இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள் கீதா, ரேவதி, சுபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.