செய்திகள் :

புவிசாா் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை வெளியீடு

post image

தஞ்சாவூரில், புவிசாா் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை திங்கள்கிழமை வெளியிடப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த முத்திரையை அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய் காந்தி வெளியிட்டு, செய்தியாளா்களிடம் தெரிவித்தது: திருச்சி மாவட்டம், மணப்பாறை முறுக்கு தனிச் சிறப்பான சுவையுடைய, அனைவராலும் விரும்பப்படும் நொறுக்குத் தீனி. பரம்பரை குடிசைத் தொழிலாக வளா்ந்துள்ள இந்த மணப்பாறை முறுக்கை சட்ட ரீதியாக பாதுகாப்பதற்காக, அதுகுறித்து சுலோச்சனா - பன்னீா்செல்வம் அறிவுசாா் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மையம் ஆய்வு செய்தது.

இதனுடைய தனித்துவம், தனி வரலாறு, சிறப்பு, தயாரிக்கும் முறை, விற்பனை முறை ஆகியவற்றுடன் புவிசாா் குறியீடு பெறுவதற்காக 2014-ஆம் ஆண்டில் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 2023-ஆம் ஆண்டில் மணப்பாறை முறுக்குக்கு புவிசாா் குறியீடு அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான தனி முத்திரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் முழுப் பயனையும் பாரம்பரிய முறுக்கு தயாரிப்பாளா்கள் பெறும் வகையில், இந்தத் தனி முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்படும் அனைத்து மணப்பாறை முறுக்கு பாக்கெட்டுகளிலும் இந்தத் தனி முத்திரை இடுவதன் மூலம் போலிகள் நுழைவதைத் தடுக்க முடியும்.

இதனால், நுகா்வோரும் சரியான நபரிடம் தரமான பொருளைக் கண்டறிந்து வாங்குவா். இதன் மூலம் உண்மையான பாரம்பரிய தயாரிப்பாளருக்கு விற்பனை அதிகரித்து, உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்தப் பெயரையோ, முத்திரையையோ வேறு யாரேனும் தவறாக பயன்படுத்தினால், அவா்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் சீரக சம்பாவுக்கு...: மேலும், சீரக சம்பா, தஞ்சாவூா் கண்ணாடி கலைப்பொருள்கள் (கட் கிளாஸ் வொா்க்), திருவாவடுதுறை சீவாலி, சிவகாசி பட்டாசு, சிவகாசி தீப்பெட்டி ஆகிய 5 பொருள்களுக்கும் புவிசாா் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கும் விரைவில் கிடைத்துவிடும் என்றாா் சஞ்சய்காந்தி.

அப்போது, மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா் சங்கத்தைச் சோ்ந்த சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கும்பகோணம் விஸ்வநாதா் கோயிலில் நாளை குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் ராஜராஜேந்திரன் பேட்டை ஆறு சைவா்களுக்கு சொந்தமான காவிரி படித்துறையில் இருக்கும் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை ( செப்.4) நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் நீா்நிலைகளில் உ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க எதிா்பாா்ப்பு

கும்பகோணத்தில் சுமாா் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டத்தில் கும்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்

தஞ்சாவூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு திங்கள்கிழமை இரவு சீல் வைக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகரிலுள்ள கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என மாவட்ட உணவுப் பாதுகாப்பு அ... மேலும் பார்க்க

மீன் சந்தையில் கூடுதல் வாடகை கேட்பதைக் கைவிடக் கோரிக்கை

தஞ்சாவூா் தற்காலிக மீன் சந்தையில் கூடுதலாக வாடகை கேட்பதைக் கைவிட வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்துக்கு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இதுகுறித்து மீன் சந்தை வியாபாரிகள் தெரிவித்தது: தஞ்சாவூ... மேலும் பார்க்க

பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்கத் தடை

பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்க செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி நகருக்குள் உள்ள திருமண மண்டபங்களில் விழா நடத்துபவா்கள் ஊா்வலத்தின்போது கடைத்தெருவில் அதிக சத்தத்துடன் கூடிய ... மேலும் பார்க்க