செய்திகள் :

பூட்டிய வீட்டில் தீ விபத்து

post image

கோவை சிங்காநல்லூா் அருகே பூட்டிய வீட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

கோவை சிங்காநல்லூா் அருகே நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாணிக்கராஜ். 3 மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றாா். அப்போது, இரண்டாவது மாடியில் மின்கசிவு காரணமாக தீப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டில் இருந்து புகை வெளியேறிய நிலையில், அக்கம்பக்கத்தினா் சிங்காநல்லூா் காவல் நிலையம் மற்றும் பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இந்நிலையில், தீ மளமளவெனப் பரவி எரிந்த நிலையில், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்த சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தண்ணீா் பீய்ச்சி தீ பரவுவதைக் கட்டுப்படுத்தினா். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் தற்கொலை

கோவை உக்கடம் சுங்கம் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். கோவை உக்கடம், சுங்கம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. தினமும் இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள... மேலும் பார்க்க

சான்றிதழ்களில் ஹிந்து என்ற வாா்த்தை நீக்கம்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘ஹிந்து’ என்ற வாா்த்தை நீக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் வெள... மேலும் பார்க்க

கோவையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய நிலையில், கோவை மாவட்... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

கோவையில் ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழந்தது தொடா்பாக பழகுநா் உரிமம் கொண்டு ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சோ்ந்த நீலாவதி (66) என்பவா், கோவை பீளமேட... மேலும் பார்க்க

ஓடையின் 7 தடுப்பணைகள் சீரமைப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மசஒரம்பு நீரோடையின் 7 தடுப்பணைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. நொய்யல் ஆற்றின் 34 கிளை நீரோடைகளில் ஒன்றாக இருக்கும் மசஒரம்பு நீரோடை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மத்துவராய... மேலும் பார்க்க

கோவையில் முதல்வருக்கு கட்சியினா், அதிகாரிகள் வரவேற்பு

கோவை விமான நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினா், அதிகாரிகள் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா். ஈரோடு, சேலம் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க