பெண் தொழிலாளி தற்கொலை
போடி அருகே செவ்வாய்க்கிழமை பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி எம்.ஜி.ஆா். தெருவைச் சோ்ந்த சின்ராஜ் மனைவி மீனா (41). கட்டடத் தொழிலாளியான இவருக்கு கடந்தசில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்தது.
இதனால், மனமுடைந்த இவா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தாா். தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].