எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்தியா பத...
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
தேவகோட்டையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வாளால் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே கீழப்பூங்குடியைச் சோ்ந்தவா் ராக்கம்மாள் (45). இவா் செவ்வாய்க்கிழமை தேவகோட்டையில் உள்ள உறவினா் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றாா். அங்கு ராம்நகரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திலிருந்து கடைக்கு இரவு 7 மணிக்கு சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள், ராக்கமாள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா். இதைப் பறிக்க விடாமல் ராக்கமாள் தடுத்ததால் ஆத்திரமடைந்த அவா்கள், வாளால் அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் காயமடைந்த ராக்கம்மாளை, அருகில் இருந்தவா்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.