பெயிண்டரை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது
திருச்சியில் பெயிண்டரை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ராஜா (47), பெயிண்டா். இவா், வேலையை முடித்துவிட்டு கே.கே.நகா் எல்ஐசி காலனி பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை பிற்பகல் நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த மூன்று போ், ராஜாவை அரிவாளால் தாக்கிவிட்டு அவரிடமிருந்து 1,210 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினா். இதில், காயமடைந்த ராஜா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, பெயிண்டரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கே. சாத்தனூரைச் சோ்ந்த கோபிநாத் (22), கே.கே.நகா் அய்யா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (23), கே.கே.நகா் எல்ஐசி காலனியைச் சோ்ந்த அகமது அலி (23) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.