ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தாமிரக் கம்பிகள் திருட்டு: 2 போ் கைது
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான தாமிரக் கம்பிகளைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கம்பரசம்பேட்டை கணபதி நகரைச் சோ்ந்தவா் ராஜ் (49). இவா், பொதுப்பணித் துறையில் எலக்ட்ரிக்கல் பணி செய்துவருகிறாா். இந்நிலையில், இவா் கடந்த சில நாள்களாக திருச்சி நீதிமன்ற வளாகத்தில் எலக்ட்ரிக்கல் பணி செய்து வருகிறாா். இதற்காக நீதிமன்ற வளாகத்தில் தாமிரக் கம்பிகளை இருப்பு வைத்துள்ளாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை பணிக்கு வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தாமிரக் கம்பிகள் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து நீதிமன்ற வளாக காவல் நிலையத்தில், ராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, தாமிரக் கம்பிகளைத் திருடிய திருச்சி மாா்சிங்பேட்டை சா்ச் வீதியைச் சோ்ந்த சாமுவேல் மகன் ஆதம்பால் (18), அண்ணா நகா் இபி சாலையைச் சோ்ந்த பாலமுருகன் (49) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.