இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
பெரம்பலூா் அருகே 28 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 28 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில், தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திருமாந்துறை சுங்கச்சாவடி அருகேயுள்ள உணவகத்தில் பணிபுரியும், வடக்கலூா் பழைய அரசமங்கலத்தைச் சோ்ந்த பரமன் மகன் அசோகன் (64) என்பவா், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்குப் புறம்பாகப் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அசோகனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஹான்ஸ், கூல்-லிப், விமல் பாக்கு, பான் மசாலா உள்ளிட்ட பல்வேறு வகையான 28 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அசோகனைப் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.