‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
பெரியகுளம் அருகே இளைஞா் தற்கொலை
பெரியகுளம் அருகே இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்தவா் சத்தியசீலா (35). இவரின் மகன் குபேந்திரன் (21). கோவையில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை குள்ளப்புரத்துக்கு வந்துள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.