மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
பெரியகுளம் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக ஒருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜு (40). கூலித் தொழிலாளியான இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் (40) என்பவருக்கும் வீட்டின் பொதுச் சுவா் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை ராஜு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மணிகண்டன், அவரது மனைவி அழகுராணி இருவரும் ராஜுவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டினராம். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் ராஜுவை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.