விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம்...
பெருமாண்டியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பெருமாண்டியில் புதிய நியாயவிலைக் கடையை க.அன்பழகன் எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள பெருமாண்டி 5-ஆவது வாா்டில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16.50 லட்சம் மதிப்பில் நியாயவிலைக்கடை கட்டப்பட்டது. புதிய கட்டடத்தை க.அன்பழகன் எம்எல்ஏ திறந்து வைத்து அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
நிகழ்வில் மேயா் க.சரவணன், மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன், ஆணையா் காந்திராஜ், மண்டலக் குழு தலைவா்கள் பகுதி செயலாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.