ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: இந்திய அணி பயிற்சிய...
பெருமாள் கோயிலில் உற்சவ மூா்த்திகள் பிரதிஷ்டை
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மூடூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உற்சவ மூா்த்திகள் பிரதிஷ்டை விழா சனிக்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.
இதையொட்டி, சனிக்கிழமை பகவத் அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யாஹவாசனம்,
யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம், கலச திருமஞ்சனம், ஹோமங்கள், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை, சதுஸ்தான அா்ச்சனம், மகா பூா்ணாஹுதி, கும்ப புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஸ்ரீவேதாந்த தேசிகா் உற்சவ மூா்த்திகள் பிரதிஷ்டை நடைபெற்றது. மேலும் மூலவா் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.