செய்திகள் :

'பெரும்பாலும் உங்க பாட்டுதான் கேட்பேன்...' - இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்

post image

இங்கிலாந்தில் இசைஞானி இளையராஜா முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ள இளையராஜாவை வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து, இருவரும் உரையாடிக் கொண்டனர். "இசைஞானி என்பதை கலைஞர்தான் வைத்தார். அதை மாற்ற முடியவில்லை" என்றார். அதற்கு, "எத்தனை பட்டங்கள் வந்தாலும் இந்த பட்டம் தான் நிற்கிறது.

ஸ்டாலின்- இளையராஜா

இசைஞானியாக உலக அளவில் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் குடியிருக்கிறீர்கள். ஜூன் 3 என்ற உங்களுடைய பிறந்த தேதியை ஜூன் 2 என மாற்றிக்கொண்டீர்கள்" எனக் கேட்டார். அப்போது "எல்லாம் அப்பாவுக்காக தான்" என இளையராஜா தெரிவித்தார். அதையடுத்து பேசிய ஸ்டாலின், "எஸ்.பி பாலசுப்பிரமணியன் பாடல்கள் அடங்கிய சிடியில் பெரும்பாலும் உங்களுடைய இசைதான் உள்ளது. காரில் செல்லும் போது எப்போது அதைதான் கேட்கிறேன்" என உரையாடிக் கொண்டனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். ``இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது, ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8ஆம் தேதி அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று (மார்ச் 2) நேரில் சென்றேன்.

ஸ்டாலின்- இளையராஜா

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Sadaa: `நடிகை டு புகைப்படக்கலைஞர்' கானகத்தின் அழகியலை காட்சிகளாக்கும் சதா - வாழ்த்தும் பெண்கள்

திரைப்பட நடிகையாக அறியப்படும் சதா, அர்ப்பணிப்பான காட்டுயிர் புகைப்படக் கலைஞர், வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர், விலங்குகள் நல உரிமை அமைப்பின் ஆதரவாளர் என சூழலியல் பாதுகாப்பில் அதி தீவிரமாக இயங்கிக் கொண... மேலும் பார்க்க

Sabdham: 'தொழில்நுட்ப அறிவும், கதை நகரும் விதமும் சிறப்பு'- சப்தம் படத்தைப் பாராட்டிய ஷங்கர்

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் - நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சப்தம்'. 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் ம... மேலும் பார்க்க

Suzhal 2:``மணிகண்டன் அதைப் பண்ணியே ஆகணும்!'' - புஷ்கர் & காயத்ரி பேட்டி

இயக்குநர் புஷ்கர் - காயத்ரி எழுத்தில் உருவாகி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது, `சுழல்' வெப் சீரிஸின் இரண்டாவது சீசன். இரண்டாவது சீசனின் ரிலீஸையொட்டி புஷ்கரையும் காயத்ரியையும் சந்தி... மேலும் பார்க்க

Sai Pallavi: `தெலுங்குல நடிகையா தெரியுறேன்; தமிழ்ல ரௌடி பேபியா தான் தெரியுறேன்னு..!' - சாய் பல்லவி

சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது . படக்குழுவினர் மற்றும் விநியோகஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். இந்த நிகழ்வின் காணொளிகள் ஒவ்வொன்றாக யூட்... மேலும் பார்க்க

Coolie: ரஜினியின் கூலி படத்தில் நான் நடிக்கிறேனா?- சந்தீப் கிஷன் அளித்த விளக்கம்

மாநகரம், மாயவன், தனுஷுடன் கேப்டன் மில்லர், ராயன் உள்ளிட்டப் படங்களில் நடத்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து லைகா தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரத... மேலும் பார்க்க

Sundeep Kishan: ``விஜய் மகன்னு சொல்லாதீங்க,அவர் பேரு ஜேசன் சஞ்சய்"- சந்தீப் கிஷன்

மாநகரம், மாயவன், தனுஷுடன் கேப்டன் மில்லர், ராயன் உள்ளிட்ட படங்களில் நடத்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து லைகா தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரது ... மேலும் பார்க்க