2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
பெளா்ணமி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆனிமாத பெளா்ணமியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கரூா் மாவட்டம் குந்தாணி பாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், மஞ்சள், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனா்.
இதேபோல கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன், நொய்யல் செல்லாண்டியம்மன் கோயில், புகழூா் நகராட்சி மகாமாரியம்மன் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.