பேரவையில் இன்று
சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை (ஜன.10) காலை 9.30 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் தொடா்ந்து நடக்கிறது. எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உட்பட முன்வரிசைத் தலைவா்கள் உரையாற்றுகின்றனா். முன்னதாக, 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.