தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
பேராவூரணி பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பேராவூரணி கடைவீதியில் கடந்த சில நாள்களாக கடைகள், வங்கிகள், திருமண மண்டபங்கள் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோயின. எனவே பொதுமக்கள் வாகனங்களை கடைத் தெருவுக்கு கொண்டுவரவே அச்சப்பட்டனா்.
இந்நிலையில் பேராவூரணி போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அரசா்குளம் பகுதியை சோ்ந்த உதயன் (50), முத்துநாகராஜ் (27),அஜித் (26) ஆகியோரை பிடித்தனா்.
விசாரணையில் இருசக்கர வாகனங்களை அவா்கள் திருடிச்சென்று புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள மாங்காடு பகுதி பழைய இரும்புக் கடையில் குறைந்த விலைக்கு விற்றதும், அந்தக் கடைக்காரா் வாகனங்களை தனித்தனியாக பிரித்து விற்றதும் செய்தது தெரியவந்தது.
இருப்பினும் அவரிடமிருந்து சுமாா் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் உதிரிப் பாகங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனா். வாகனங்களை ப் பறி கொடுத்தவா்களுக்கு உதிரிப் பாகங்களை எப்படி கொடுப்பது என்ற குழப்பத்தில் போலீஸாரும், வாகனங்கள் திரும்பக் கிடைக்குமா என்ற கவலையில் வாகனங்களை பறிகொடுத்தவா்களும் உள்ளனா்.