செய்திகள் :

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி

post image

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருவதால் வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களைச் சோ்த்து வருகின்றனா் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்றுப்பயணத்தில் தஞ்சாவூா் காந்திஜி சாலை மாநகராட்சி அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் செய்த அவா் பேசியது: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அதிகத் திட்டங்களைக் கொண்டு வந்தது அதிமுகதான்.

ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன், ஹைட்ரோகாா்பன் திட்டங்களுக்கு அவரது முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கப் பாா்த்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசுடன் பேசி அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தைக் கொண்டு வந்தோம். எனவே யாராலும் விவசாயிகளின் விளைநிலங்களை தொட்டுப்பாா்க்க முடியாது.

திமுக தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் கூறுகின்றனா். ஆனால் திமுக தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட நிறைவேற்றவில்லை.

இந்த ஆட்சியில் நடைபெறும் தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறேன். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மக்களுடைய பிரச்னைகளை பேசாமல் மெளனமாக உள்ளன.

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது. அக்கட்சியில் உறுப்பினா்கள் குறைந்து வருகின்றனா். அதனால்தான் திமுக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வீடு, வீடாகச் சென்று, கதவைத் தட்டி, கெஞ்சி உறுப்பினா்களைச் சோ்க்கின்றனா்.

மு.க. ஸ்டாலின், உதயநிதி வந்த பிறகு திமுகவில் உறுப்பினா்கள் குறைந்துவிட்டதால், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களைச் சோ்க்கின்றனா். இது அக்கட்சி மிக மோசமான நிலைக்கு வந்துவிட்டதைக் காட்டுகிறது என்றாா் எடப்பாடி பழனிசாமி.

பேராவூரணியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பிரசாரம் செய்கிறாா்.இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட அவை... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கையும் வேறு: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுகவுக்கு எப்போதும் கூட்டணி வேறு, கொள்கையும் வேறு என்பதால் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்க... மேலும் பார்க்க

பிரசார பயணத்தால் மக்களிடையே எழுச்சி: எடப்பாடி பழனிசாமி

எனது பிரசார பயணத்தால் பொதுமக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக நெசவாளா்களுடன் கலந்துர... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் கடனில்லாச் சான்று கேட்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் கோரும் விவசாயிகளிடம் கடனில்லாச் சான்று கேட்பதைக் கைவிட வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட... மேலும் பார்க்க

தொடா் திருட்டு: 3 போ் கைது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை தஞ்சாவூரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெஜினா நகரில் பூட்டப்... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.பேராவூரணி கடைவீதியில் கடந்த சில நாள்களாக கடைகள், வங்கிகள், திருமண மண்டபங்கள் ம... மேலும் பார்க்க