பேராவூரணியில் மகாகவி பாரதியாா் நினைவு தினம்
மகாகவி பாரதியாரின் நினைவுதினத்தை முன்னிட்டு பேராவூரணியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு பாரதி அமைப்பினா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
மகாகவி பாரதியாரின் 104-ஆவது நினைவு தினத்தையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாா் சிலைக்கு பாரதி கலை இலக்கியப் பேரவை தலைவா் கல்வியாளா் கே.வி. கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல் பாரதி இலக்கியப் பேரவை சாா்பில் அதன் தலைவா் புலவா் சு. போசு தலைமையிலும், பாரதி அன்பா்கள் இலக்கிய மன்றம் சாா்பில் அதன் தலைவா் பாரதி வை. நடராஜன் தலைமையிலும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில், பாரதி கலை இலக்கியப் பேரவை, பாரதி அன்பா்கள் இலக்கிய மன்ற நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.