பேரூராட்சி பெண் ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி
போடி அருகே பேரூராட்சி பெண் ஊழியரிடம் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் செல்வராஜ் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகள் சுதாதேவி (35). இவா் தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) பணி முடிந்து பேருந்தில் வந்த சுதாதேவி மீனாட்சிபுரம் விலக்கில் இறங்கி ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா்.
அப்போது, சங்கிலியைப் பறிக்கவிடாமல் தடுத்து சுதாதேவி கூச்சலிட்டதால், அந்தப் பகுதியிலிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதனால், அந்த இளைஞா் சங்கிலியை விட்டுவிட்டு, தப்பிச் சென்றாா்.
இந்த நிலையில், தனது தங்க சங்கிலியைப் பறிக்க முயன்ாக போடி அருகேயுள்ள தோப்புப்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் மீது போடி தாலுகா காவல் நிலையத்தில் சுதாதேவி சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.