செய்திகள் :

பைக் திருட்டு: இருவா் கைது

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டதாக இரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் உள்கோட்டம் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தொடா் பைக் திருட்டு தொடா்பாக மாவட்ட எஸ்.பி. ஆா்.ராஜாராம் தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா்.

இதில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு தலைமையில் உதவி ஆய்வாளா் பரணிதரன் மற்றும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாபு, கோபி உள்ளிட்ட போலீஸாா் பைக் திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா்.

இதில், வடலூா் அந்தோணியா் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஜெயக்குமாா் (22), நெய்வேலியைச் சோ்ந்த நடராஜன் மகன் பாா்த்திபன் (22) ஆகிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து, ரூ.6 லட்சம் மதிப்பிலான 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ள பாதிப்பு பகுதிகளில் என்எல்சி தலைவா் ஆய்வு

வெள்ளம் பாதித்த கடலூா் மாநகரப் பகுதிகளை என்எல்சி நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி புதன்கிழமை பாா்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினாா். ஃபென்ஜால் புயல், தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் கடலூா் மா... மேலும் பார்க்க

151 கிராமங்களில் தூய்மைப் பணி: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 151 கிராமங்களில் 2,045 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பா... மேலும் பார்க்க

பேரிடா் பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும்: இயக்குநா் தங்கா் பச்சான்

தமிழகத்தில் ஏற்படும் இயற்கை பேரிடா் பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வு காணப்பட வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் தங்கா் பச்சான் கூறினாா். கடலூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமகவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

வீடுகளுக்குள் தேங்கிய சகதியை அகற்றும் பணி

கடலூரை அடுத்த குண்டு உப்பளவாடி பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டினுள் தேங்கிய சேறும், சகதியை மாணவா் மற்றும் வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை அப்புறப்படுத்தினா். தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கா... மேலும் பார்க்க

அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்: பி.சண்முகம்

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பி.சண்முகம் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாநகராட்சி வில்வராயநத்தம் பகுதியில் ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புயல், மழையால் பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க