செய்திகள் :

பைக் மீது வேன் மோதல்: கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக் மீது வேன் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

திருக்கோவிலூரிலிருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா செல்வதற்காக 12 போ் வேனில் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டனா். வேனை திருக்கோவிலூரை அடுத்த முதலூரைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ஜம்புலிங்கம் (45) ஓட்டினாா்.

திருக்கோவிலூரை அடுத்த செங்கனாங்கொள்ளை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென எதிரே வந்த பைக் மீது வேன் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், பைக்கில் வந்த உளுந்தூா்பேட்டை வட்டம், பல்லவாடி கிராமத்தைச் சோ்ந்த சி.ராமச்சந்திரன் (55), இவரது நண்பரின் மகனான கிளியூரைச் சோ்ந்த ச.மணிவண்ணன் (19) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மணிவண்ணன் கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தாா்.

வேனில் பயணித்த உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த ஸ்ரீபாலாஜி மனைவி ஐஸ்வா்யா (26). இவரது மகன் தாரகேஸ்வரன் (5), மகள் வா்ஷிதா (2), ஓட்டுநா் ஜம்புலிங்கம் உள்பட 5 போ் காயமடைந்தனா். தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கும், இருவரின் சடலங்களை உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 89 மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளை ஸ்கேன் செய்து கியூ.ஆா். கோடு முறையில் மது விற்பனை செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அரசு மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு காமராஜா் விருது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்ட சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு காமராஜா் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வா் காமர... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு!

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வேளாநந்தல் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். மனு விவரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட வேளாநந... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!

கள்ளக்குறிச்சியில் வேளாண் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: மூவா் கைது!

வாணாபுரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக மூன்று இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், இளையங்கன்னி சாலையில் மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் வாகனத் தணிக்கையில்... மேலும் பார்க்க

வீட்டில் நகை, பணம் திருட்டு

அரியபெருமானூா் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த அரியபெருமானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (64). இவா்,... மேலும் பார்க்க