`ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று எவரும் இல்லை' - அம்பத்தி ராயுடு
பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், அனுமந்தை, தெற்கு தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (44), திருமணம் ஆனவா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கோட்டக்குப்பம் காவல் சரகத்துக்குள்பட்ட மஞ்சகுப்பம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த சுந்தரமூா்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னா் காா் மூலம் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது சுந்தரமூா்த்தி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.