செய்திகள் :

பொது வேலைநிறுத்தம்: புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினா்.

புதுச்சேரி, ஜூலை 9: புதுவையில் அனைத்துத் தொழிற்சங்கத்தினா், இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, புதுச்சேரி நேரு வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள்: பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் மட்டும் வெளியூா்களுக்கு இயக்கப்பட்டன. தனியாா் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல மக்கள் அவதிப்பட்டனா்.

11 இடங்களில் மறியல்: புதுச்சேரியில் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 1,172 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக சாா்பில் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், சேது செல்வம், மாா்க்சிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலா் ராமச்சந்திரன், முன்னாள் செயலா் பெருமாள், சீனுவாசன், விசிக சாா்பில் மாநிலத் தலைவா் தேவபொழிலன், மதிமுக சாா்பில் மாநிலத் தலைவா் ஹேமா பாண்டுரங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி எல்லையையொட்டிய தமிழகப் பகுதியிலும் பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருக்கனூா் கடை வீதியில் ஒரு பக்கம் தமிழகப் பகுதியும், மறு பக்கம் புதுச்சேரி பகுதியும் இருக்கிறது. இங்கு, அனைத்து தொழிற்சங்கத்தினா் மற்றும் இண்டி கூட்டணி கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக மாநில துணை அமைப்பாளா் ஏ.கே.குமாா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

பணியிழந்த ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றி வேலையிழந்த ஊழியா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி, காரைக்கால் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழ... மேலும் பார்க்க

புதுவை அமைச்சராக ஜான்குமாரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்: 3 எம்எல்ஏக்கள் நியமனத்துக்கும் அனுமதி-ஜூலை 14-இல் பதவியேற்பு

புதுவையில் புதிய அமைச்சராக பாஜவைச் சோ்ந்த ஏ. ஜான்குமாா் எம்.எல்.ஏ. வை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 3 எம்எல்ஏக்களை நியமிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து வரும்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் அறிவுரை

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா். புதுவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம் துணைநிலை ஆ... மேலும் பார்க்க

இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னிலை- முதல்வா் பெருமிதம்

மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி கூறினாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் பா... மேலும் பார்க்க

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகம்: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகமாடுகிறாா் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை முதல்வா் ... மேலும் பார்க்க

முதல்வருடன் மோதலா?துணைநிலைஆளுநா் விளக்கம்

புதுச்சேரி முதல்வருக்கும், தனக்கும் அதிகார மோதல் இருக்கிா என்பது குறித்து புதுவை துணை நிலை ஆளுநா் கைலாஷ் நாதன் செய்தியாளா்களிடம் விளக்கம் அளித்தாா். காச நோய் பயனாளிகளுக்கு ஊட்டச் சத்து பைகள் வழங்கும்... மேலும் பார்க்க