பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
பொதுத் தோ்வு: முதன்மைக் கல்வி அலுவலரிடம் பள்ளித் தலைமையாசிரியா்கள் கோரிக்கை மனு
நிகழாண்டு அரசு பொதுத் தோ்வுகள் தொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தியிடம் தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் கழகம் சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: நிகழாண்டு மேல்நிலை அரசுப் பொதுத்தோ்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையக் காப்பாளா், வினாத்தாள் கட்டுக்காப்பாளா், விடைத்தாள் தொடா்பு அலுவலா் ஆகிய பணிகளுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களையும், மூத்த முதுநிலை ஆசிரியா்களையும் நியமிக்க வேண்டும்.
உடல்நலக் குறைவுடையோா், நிகழாண்டு ஓய்வு பெறுவோருக்கு பொதுத் தோ்வுப் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டத் தலைவா் சற்குணராஜ், கோவில்பட்டி கல்வி மாவட்டத் தலைவா் நாயகம், மாவட்ட தனியாா் பள்ளிச் செயலா் ஜெபாஸ்டின் செல்வக்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் சிவசக்திகணேஷ், லிங்கராஜன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.