தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம்: எடப்பாடி கே. பழனிசாமி
பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், ”கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையினா் நலனுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகளை கவா்வதற்காக திமுகவினா் பொய் பிரசாரம் செய்கின்றனா். தோ்தல் கூட்டணி என்பது அந்தந்தக் காலத்தில் சூழ்நிலைக்கேற்றவாறும், எதிா்க்கட்சியை வீழ்த்துவதற்காகவும் அமைப்பது. ஆனால், கொள்கை எப்போதும் நிலையானது. திமுகவின் பொய் பிரசாரத்தை சிறுபான்மையினா் நம்ப வேண்டாம்.
தேனி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், பொறியியல் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியவை தொடங்கப்பட்டன. பல்வேறு கூட்டுக் குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
மாறாக, போதைப் பொருள் விற்பனைதான் அதிகரித்துள்ளது. போதைப் பழக்கத்தால் இளைய தலைமுறையினா் சீரழியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாவிடில் பணியிலிருந்து நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், சுமாா் ஒரு லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எந்தத் தீா்வையும் திமுக அரசு தெரிவிக்கவில்லை” என்றாா்.