செய்திகள் :

பொள்ளாச்சி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்; வீடியோ வெளியிட்ட மாணவிகள்; பின்னணி என்ன?

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியின் இசை ஆசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் ஆகியோர் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் புகார்
பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் புகார்

பள்ளியின் இசை ஆசிரியர் மாணவிகளுக்கு நடனம் பயிற்சி கற்றுக் கொடுக்கும்போது மாணவிகள் மீது கை வைத்து கற்றுக் கொடுப்பதாகவும், தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. 

இதேபோல தாவரவியல் ஆசிரியரும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் 3 பேர் தங்களின் முகங்களை துணியால் மூடிக்கொண்டு வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்து கல்வித்துறை மற்றும் காவல்துறைக்குப் புகார் அனுப்பியுள்ளனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தப் புகாரை அடுத்து காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் பள்ளியில் இருக்கும் மாணவிகள் யாரும் பாலியல் குற்றச்சாட்டைச் சொல்லவில்லை. இதையடுத்து அந்த வீடியோவை வெளியிட்டது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

பாலியல் சீண்டல்
பாலியல் சீண்டல்

அதில் அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் தாய் தான் வீடியோவை வெளியிட்டார் எனத் தெரிந்தது. அவருக்கு சம்மன் அனுப்பி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாணவியின் தாய், “பள்ளியில் தொடர்ச்சியாக நிறைய தவறுகள் நடக்கின்றன. இதுகுறித்து தமிழக முதல்வர் வரை புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. அதனால் தான் வீடியோ எடுத்து வெளியிட்டோம். வீடியோவில் பேசிய 3 மாணவிகளில் ஒருவர் என்னுடைய மகள்.

காவல்துறை
காவல்துறை

அந்த ஆசிரியர்கள் அரசியல் பின்புலத்தில் தப்பித்து வருகிறார்கள்” என்றார்.

இதனிடையே பள்ளி நிர்வாகத்திற்கும், அந்த மாணவியின் பெற்றோருக்கும் தனிப்பட்ட பிரச்னை நிலவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்த... மேலும் பார்க்க

சென்னை: உடன் பழகிய இளைஞருக்குத் திருமணம்; திருநங்கை செய்த விபரீத செயல்; என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்,(30). இவர் சென்னை, மதுரவாயிலில் தங்கி, வானகரத்திலுள்ள அவரின் தாய் மாமாவின் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அஜித்துக்கும்... மேலும் பார்க்க

சேலம்: விசாரணைக்கு வந்த முதியவர் திடீர் மரணம்; காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகர் பகுதியில் வீரசம்பு என்பவர் பத்திர எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஜி.ஓ பில்டிங்கில் அமைந்துள்ளது. இவரிடம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்... மேலும் பார்க்க

தர்மஸ்தல மஞ்சுநாதர் கோயில் குற்றச்சாட்டு: புகார்தாரர் கைது; பெண் `அந்தர்பல்டி' - என்ன நடந்தது?

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலத்தில் மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். புகார் கடந்த ஜூன் மாதம், இந்தக் கோவிலின் முன்னாள் தூய்மைப் பணியாளர் இந்தக் கோ... மேலும் பார்க்க

நீலகிரி: பழங்குடி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; தலைமறைவிலிருந்த ஆசிரியர் கைது; பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வரும் மாரியப்பன் என்பவர் 11 மற்றும் 12 - ம் வகுப்பு மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வ... மேலும் பார்க்க

தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்துள்ள பூசாரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47). கூழித்தொழில் செய்து வந்தார். இவருக்கு ஆகாஷ் (23) என்ற மகன் உள்ளார். ஆகாஷ் கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்... மேலும் பார்க்க