மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது வழக்குப் பதிவு
பல்லடத்தில் கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்நிலையில், டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பாா்வையில், பல்லடம் போக்குவரத்து உதவி ஆய்வாளா் அன்புராஜ் மற்றும் போக்குவரத்து போலீஸாா் பல்லடம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
இதில், தலைக் கவசம் அணியாமல் சென்ற 227 போ், மது போதையில் வாகனங்களை இயக்கிய 157 போ், சிக்னலை மதிக்காமல் செல்வது, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 1,216 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 500 அபாராதம் வசூலிக்கப்பட்டது. 126 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்று பல்லடம் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.