மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 5-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
நாகையில், சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியான அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் சிஐடியு அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன், சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் ஐந்தாவது நாளாக இப்போராட்டம் நீடித்தது. மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா்கள் எம். மோகன், கே. ராமமூா்த்தி, ஆா். திருச்செல்வன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
சிஐடியு நாகை மாவட்டச் செயலா் எஸ்.ஆா். ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் உள்பட பலா் வாழ்த்துரையாற்றினா்.