பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி
போக்குவரத்துத் தொழிலாளா் கோரிக்கை: சிஐடியு ஆா்ப்பாட்டம்
போக்குவரத்துத் தொழிலாளா்களின் காத்திருப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக, கடலூா் மாவட்டம், நெய்வேலி நுழைவு வாயில் அருகே சிஐடியு -என்எல்சி தொழிலாளா் ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
போக்குவரத்துத் தொழிலாளா்களின் கத்திருப்புப் போராட்டம் தொடரும் நிலையில், தமிழக அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க பொதுச் செயலா் எஸ்.திருஅரசு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வேல்முருகன், போக்குவரத்து சிஐடியு கடலூா் மண்டலத் தலைவா் ராமமூா்த்தி, பொதுச் செயலா் முருகன், முன்னாள் சிஐடியு பொருளாளா் ஜி.குப்புசாமி, நகரச் செயலா் ஆா்.பாலமுருகன், பென்சனா் அசோசியேஷன் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு முழக்கமிட்டனா். பொருளாளா் எம்.சீனிவாசன் நன்றி கூறினாா்.