பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
போதை மாத்திரைகள் வைத்திருந்தவா் கைது
வலி நிவாரணி மாத்திரையை போதைக்கு பயன்படுத்திய நபா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா், நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கே.செட்டிபாளையம் பகுதி அருகே வலி நிவாரணி மாத்திரைகளை சிலா் போதைக்கு பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஜீவானந்தம் (30) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 700 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.