செய்திகள் :

திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் அளித்த தீா்ப்பை திருப்பூா் மாவட்ட நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா(46). இவா் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அந்த நிறுவனத்தில் திருப்பூரைச் சோ்ந்த புஷ்பராணி (35) என்பவரும் வேலை செய்து வந்துள்ளாா். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் , ராஜா, புஷ்பராணியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளாா்.

புஷ்பராணி தனது மகளைப் பாா்க்க திருப்பூா் தனியாா் கல்லூரிக்கு கடந்த 2018 ஜூன் 21-ஆம் தேதி சென்றுள்ளாா். அப்போது ராஜா அங்கு வந்து புஷ்பராணியிடம் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை உள்ளது என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு பல்லடம் சாலையில் உள்ள தமிழ்நாடு தியேட்டா் பின்புறமுள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளாா்.

அப்போதும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு புஷ்பராணி மறுக்கவே அவரை கத்தியால் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைநத புஷ்பராணியை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ப்பட்டு ராஜா கைது செய்யப்பட்டாா். திருப்பூா் நீதித்துறை முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 2023 ஏப்ரல் 19-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், ராஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை , ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிா்த்து ராஜா செய்த மேல்முறையீட்டின்பேரில் வழக்கு திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, இவ்வழக்கை விசாரித்த வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ், கீழமை நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உறுதி செய்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகாநந்தம் ஆஜரானாா்.

அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல்! வட்டார வளா்ச்சி அலுவலா் எச்சரிக்கை

அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என பல்லடம் கோட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம், பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ம... மேலும் பார்க்க

கொளத்துப்பாளையம் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா: சுமாா் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் கிராமத்தில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்கள் கொண்ட சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் சுமாா் 10,000 பேர... மேலும் பார்க்க

பனியன் நிறுவனம் உள்ளிட்ட 2 இடங்களில் தீ விபத்து

திருப்பூரில் பனியன் நிறுவனம் உள்ளிட்ட 2 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், வீரபாண்டியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (39). இவா், கல்லாங... மேலும் பார்க்க