பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
முத்தூா் அருகே பைக் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
முத்தூா், வெங்கமேட்டைச் சோ்ந்தவா் பெரியசாமி (75). இவா், முத்தூா் சேரம்பாளையம் நியாய விலைக்கடை அருகில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த பைக் அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பெரியசாமியை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
புகாரின்பேரில் பைக்கை ஓட்டிவந்த வெங்கமேடு பாலுசாமி மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.