3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
மங்கோலியாவில் தட்டம்மை பரவல்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
மங்கோலியா நாட்டில் தட்டம்மை பாதிப்பினால், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மங்கோலியாவில், கடந்த சில மாதங்களாக தட்டம்மை பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த நோயினால், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தட்டம்மையால் பாதிக்கப்பட்ட, 2 பேர் நேற்று (ஜூலை 28) சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம், மங்கோலியாவில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 6 குழந்தைகள் உள்பட 109 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள், தட்டம்மை பாதிப்புகளை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொற்றானது, இளம் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால், பெற்றோர்கள் உடனே அவர்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, 2023-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,07,500 பேர் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டு பலியாகினர். இதில், பெரும்பாலானோர் 5 வயதுகுட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: யேமனில் நிமிஷா பிரியா தூக்கு தண்டனை ரத்து? சகோதரர் மறுப்பு!