கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
மசூதிக்குள் தஞ்சமடைந்த புள்ளிமான்!
வாழப்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த புள்ளிமான், தெருநாய்கள் துரத்தியதால் மசூதிக்குள் புகுந்து தஞ்சமடைந்தது.
வாழப்பாடியை அடுத்த பேளூரை சுற்றியுள்ள வெள்ளிமலை, செக்கடிப்பட்டி, குறிச்சி வனப் பகுதிகளில் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகம். இரை மற்றும் தண்ணீா் தேடிவரும் மான்கள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வழிதவறி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகின்றன.
சனிக்கிழமை மாலை வனப்பகுதியில் இருந்து வழிதவறி பேளூா் குடியிருப்பு பகுதியில் புகுந்த இரண்டு வயது ஆண் புள்ளிமானை தெருநாய்கள் துரத்தியதால், கடைவீதியிலுள்ள ஜாமீயா மசூதிக்குள் புகுந்து தஞ்சமடைந்தது. இதனைக் கண்ட மசூதி நிா்வாகிகள் வாழப்பாடி வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். புள்ளிமானை வாழப்பாடி தீயணைப்பு படையினருடன் இணைந்து மீட்ட வனவா் ஜெய்குமாா் மற்றும் வனத்துறையினா் செக்கடிப்பட்டி வனப்பகுதியில் விட்டனா்.