நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
மண்டபம் அருகே 2 டன் பீடி இலைகள் பறிமுதல்
மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்குப் பெட்டக லாரியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலைகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், வெள்ளரி ஓடை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தல் நடைபெற உள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, இலங்கையிலிருந்து வந்த ஒரு படகில் பீடி இலைகள் ஏற்றப்பட்டதைக் கண்ட போலீஸாா் அங்கு விரைந்து சென்று படகை மடக்கிப் பிடிக்க முயன்றனா். அதற்குள் அந்த நபா்கள் படகை இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதையடுத்து, கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்குப் பெட்டக லாரியையும், அதிலிருந்த 2,250 கிலோ பீடி இலைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதில் தொடா்புடைய வெள்ளரி ஓடையைச் சோ்ந்த பாலகிருஷ்ணனை (35) போலீஸாா் கைது செய்தனா்.