மண்ணச்சநல்லூரில் கடை முற்றுகை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் திங்கள்கிழமை தீபாவளி சீட்டு பணம் தராத கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
மண்ணச்சநல்லூா்-துறையூா் சாலையில் செயல்பட்டு வருகிறது அப்பா டீ கடை. இக்கடையில் தீபாவளி பண்டிகையொட்டி மண்ணச்சநல்லூா், பூனாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தீபாவளி சீட்டு போட்டுள்ளனா்.
இந்நிலையில், சீட்டு போட்ட பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் சீட்டு பணம் தராததால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.