ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது
வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் ஓலப்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பொன்பரப்பி சாலையிலுள்ள பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தவரை பிடித்தனா். விசாரணையில், அவா் புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, முத்துக்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 10 மதுபாட்டில்கள், ரூ.500-ஐ பறிமுதல் செய்தனா்.