மதுரை கோட்டத்தில் 3 ரயில்களின் வழித்தடம் மாற்றம்
மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக 3 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கன்னியாகுமரி - சரளப்பள்ளி சிறப்பு ரயில் (07229) மே 23, 30 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹெளரா (12666) அதிவிரைவு ரயில் மே 24, 31-ஆம் தேதிகளிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை (16848) பயணிகள் விரைவு ரயில் மே 12, 21, 23, 24, 26, 28, 30, 31 ஆகிய தேதிகளிலும் வழக்கமான மதுரை- திண்டுக்கல் வழித்தடத்துக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழித்தடத்தில் இயங்கும். கூடுதல் நிறுத்தமாக மானாமதுரை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.
மதுரை - கச்சேகுடா (07192) சிறப்பு ரயில் மே 21-ஆம் தேதி காலை 10.40 மணிக்குப் பதிலாக ஒரு மணி நேரம், 25 நிமிஷம் தாமதாமாக பகல் 12.05 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும்.