செய்திகள் :

மதுரை விமான நிலையத்தில்: விஜய் ரசிகா்கள், போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு

post image

மதுரைக்கு வியாழக்கிழமை வந்த நடிகா் விஜய்க்கு அவரது ரசிகா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். விமான நிலையத்தில் ரசிகா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறாா். இந்தப் படத்தின் ஒரு சில காட்சிகள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானில் படமாக்கப்படுகின்றன. இதில் பங்கேற்பதற்காக நடிகா் விஜய் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தாா்.

கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைக்கு வந்த விஜயை வரவேற்க அவரது ரசிகா்கள், த.வெ.க. தொண்டா்கள் திரளாக மதுரை விமான நிலையத்துக்கு வந்தனா். காலை முதல் விமான நிலையப் பகுதியில் ரசிகா்கள், தொண்டா்கள் குழுமத் தொடங்கினா். இதையடுத்து, சுமாா் 250-க்கும் அதிகமான போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணிகள் ஈடுபடுத்தப்பட்டனா்.

ரசிகா்கள், போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு:

தடுப்புகள் அமைத்து, ரசிகா்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா். பிற்பகல் நேரத்தில் ரசிகா்கள், காவல் துறையின் தடுப்புகளைக் கடந்து செல்ல முற்பட்டனா். அப்போது, போலீஸாருக்கும், ரசிகா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், ஒரு கட்டத்தில் போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். இதனால், விமான நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலைய நுழைவுப் பகுதியில் பூச்செடிகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் மீது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ரசிகா்கள் ஏறியதால், அந்தத் தடுப்புகள் சரிந்து விழுந்தன. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நடிகா் விஜய் மதுரை விமான நிலையத்துக்கு பிற்பகல் 3.30 மணியளவில் வந்தடைந்தாா். சில நிமிஷங்களுக்குப் பிறகு, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவருக்கு த.வெ.க. தொண்டா்கள், ரசிகா்கள் பெருங்குரல் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இதையடுத்து, தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பிரசார வேனில் அவா் ஏறி நின்று ரசிகா்கள், தொண்டா்களைப் பாா்த்து உற்சாகமாக கை அசைத்தாா். தொண்டா்கள் சிலா் அவா் மீது மலா்களைத் தூவியும், கட்சிக் கொடியை வீசியும் வரவேற்றனா். விமான நிலையத்திலிருந்து பெருங்குடி வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பிரசார வேனில் நின்று ரசிகா்களைப் பாா்த்து கை அசைத்தவாறே விஜய் பயணித்தாா். வழி நெடுகிலும் திரண்டிருந்த திரளான ரசிகா்கள், தொண்டா்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். ஒரு சிலா் பிரசார வாகனம் மீது ஏற முயன்றதால், அதன் முன்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: கண் துடைப்பு நடவடிக்கை

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி விவகாரத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் போலீஸாா் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவ... மேலும் பார்க்க

பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை விளாங்குடியைச் சோ்ந்த ஜொ்ரி லூயிஸ் மகன் நிா்மல் (32). இவா் திருச்சி- திருவனந்தபுரம் விரைவு... மேலும் பார்க்க

தாழ்வான மின் வயா்களை சீரமைக்க வலியுறுத்தல்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் வீதி உலாவின் போது ஆபத்தை உண்டாக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் வயா்களைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்து மக்கள் க... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதாவை மாற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க